Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th January 2026 15:38:32 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு நலன்புரி உதவி

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொமாண்டோ படையணியின் பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2026 டிசம்பர் 19 மற்றும் 23 ஆகிய திகதிகளில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று நலன்புரி விடயங்களை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சித் திட்டம், போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலில் நடாத்தப்பட்டது.