19th January 2026 15:46:15 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு யூவீ ஸ்டெரிலைசர்கள், சீலிங் யூவீ ஸ்டெரிலைசர் விளக்கு மற்றும் காற்றோட்டமில்லாத முகமூடிகள் உள்ளிட்ட ரூ. 800,000.00 பெறுமதியான மருத்துவ உபகரணங்களை பனாகொடை இராணுவத் தள மருத்துவமனைக்கு 2026 ஜனவரி 09 ஆம் திகதி படையணி தலைமையக விரிவுரை மண்டபத்தில் வழங்கியது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமணி டி சில்வா, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத தளபதி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.