Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th January 2026 15:51:51 Hours

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் மிஹிந்து செத் மெதுர நல விடுதிக்கு விஜயம்

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி இரந்தி தில்ருக்ஷி பெரேரா மற்றும் முதலாம் படைத் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள், இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதைர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து 2026 ஜனவரி 17 ஆம் திகதி போர் வீரர்களை பார்வையிட அத்திட்டிய, மிஹிந்து செத் மெதுர நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

மிஹிந்து செத் மெதுர நல விடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் அன்பான வரவேற்புடன் இந்த விஜயம் ஆரம்பமாகியது.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதைர் பிரிவு, நல விடுதியின் பயன்பாட்டிற்காக ஒரு நன்கொடையாளரின் ஆதரவுடன் இரண்டு குடிநீர் கொதிகலன்கள், 32 மேசை விளக்குகள், 10 ஐஸ் பக்கட்டுகள் மற்றும் டி-சேர்ட்களை நன்கொடையாக வழங்கியது.

மேலும், போர் வீரர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் பீட் பேண்ட் வழங்கிய பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியால் இந்த விஜயம் மேலும் வண்ணமயமாக்கப்பட்டது.