Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th January 2026 21:29:12 Hours

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரால் தேங்காய் உரி மட்டைகளை துண்டுகளாக்கும் திட்டம் அறிமுகம்

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தேங்காய் உரி மட்டைகளை சில்லுகளாக பதப்படுத்தும் திட்டம் 5 வது இலங்கை கவச வாகன படையணியுடன் இணைந்து 2025 டிசம்பர் 26, அன்று ஆரம்பிக்கப்பட்டது.

படையணியின் நலன்புரி நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான ஒரு நிலையான நிதி திரட்டும் முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்த திட்டம், 5 வது இலங்கை கவச வாகன படையணியுடன் கட்டளை அதிகாரியின் ஆதரவுடன் ஆராய்ச்சி செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது, இது படைப்பிரிவின் நோக்கங்களுடன் இணக்கத்தை உறுதி செய்தது.