14th January 2026 21:27:24 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கவச வாகன படையணி படையினரின் பிள்ளைகளுக்கு, அந்தந்த இலங்கை இராணுவ படையலகுகளில், 2025 டிசம்பர் 15, முதல் 2026 ஜனவரி 01, வரை பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்தனர்.
பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிப்பதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளின் போது சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.