Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th January 2026 21:25:33 Hours

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2026 ஜனவரி 04, அன்று பீரங்கி படையணி பயிற்சி பாடசாலையில் நன்கொடை திட்டத்தை முன்னெடுத்தது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பீரங்கி படையணி பாடசாலையில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு 46 உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

மேலும் மனாம்பிட்டி சிங்கள மகா வித்தியாலய மாணவர்களுக்கு எழுதுபொருட்களுடன் 120 பாடசாலை பைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அவர்களின் பெற்றோருக்கு 72 உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. அந்தவகையில், அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்கு உலர் உணவு பொதிகள், எழுதுபொருட்கள் கொண்ட பாடசாலை பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருள் பொதிகளையும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினர் வழங்கினர்.