Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th January 2026 13:45:28 Hours

இராணுவ சேவை வனிதையரால் மூக்குக் கண்ணாடிகள் நன்கொடை

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2026 ஜனவரி 09 அன்று 58 வது காலாட் படைப்பிரிவில் ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.