12th January 2026 16:17:44 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி விந்தியா வெலேனவெவ அவர்கள் 2025 டிசம்பர் 15 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வுடன், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள் சமீபத்திய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு நன்கொடை நலத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், விஷேட படையணியின் இருபது வீரர்கள் மற்றும் இரண்டு சிவில் ஊழியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை தொடங்குவதை குறிக்கும் வகையில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.