Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th January 2026 15:08:17 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நன்கொடை

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2026 ஜனவரி 06 ஆம் திகதி நுவரெலியா மாவட்டம் அபலியத்த விகாரையில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் கருத்திற்கமைய, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு உதவித் திட்டத்தை நடாத்தியது.

இந்த நிகழ்ச்சியின் போது, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 550 பயனாளிகள் அடங்கிய 155 குடும்பங்களுக்கு ஆடைகள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முயற்சி இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் எச்.பி.டி. பிரியங்கர அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.