09th January 2026 15:04:39 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2026 ஜனவரி 03 ஆம் திகதி பல்லேகலை 810 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி பிரிவில், கண்டி பிரதேசத்தில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, உலர் உணவுப் பொருட்கள், குடிநீர் போத்தல் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த விநியோகத் திட்டத்துடன் இணைந்து, பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி சந்திமா உடரட்டகே அவர்களின் நலன் குறித்தும் விசாரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.