Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th January 2026 14:58:34 Hours

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையரால் உலர் உணவுப் பொதி நன்கொடைத் திட்டம்

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவு, பனாகொடை இராணுவ தள மருத்துவமனையில் 2026 ஜனவரி 07 ஆம் திகதி இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரந்தி தில்ருக்ஷி பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்ச்சியை நடாத்தியது.

இந்த நிகழ்ச்சியின் போது, 34 சிவில் ஊழியர்கள் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றனர். பனாகொடை இராணுவ தள மருத்துவமனையின் கட்டளை அதிகாரி கௌரவ கேணல் ஆர்.ஏ.ஏ.டபிள்யூ. விஜயசிங்க, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, பெறுநர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக இந்தப் பொதிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.