Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th January 2026 14:55:20 Hours

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரின் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலில், இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 டிசம்பர் 23 ஆம் திகதி ரொக் ஹவுஸ் முகாமில் நத்தார் பண்டிகை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

நத்தார் கரோல்கள், வண்ணமயமான விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளின் கலவையை வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிள்ளைகளுக்கு நத்தார் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.