Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th January 2026 14:53:19 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரால் சுயதொழில் பட்டறை ஏற்பாடு

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட அவர்களின் வழிகாட்டுதலில், இலங்கை பீரங்கி படையணியின் அதிகாரிகள் உணவகத்தில், மெழுகுவர்த்தி தயாரிப்பு பற்றிய சுயதொழில் பட்டறை 2026 ஜனவரி 04 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

திருமதி துஷாரி ரத்னவீர அவர்கள் இந்தப் பட்டறையை நடாத்தியதுடன், பங்கேற்பாளர்களுக்கு பெறுமதியான அறிவையும் நேரடி அனுபவத்தையும் வழங்கினார். உறுப்பினர்களிடையே சுய – அதிகாரமளிப்பை ஊக்குவிப்பதற்கும், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டனர்.