Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th January 2026 15:01:16 Hours

விஷேட படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம் ஏற்பாடு

விஷேட படையணியின் 29வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு 2026 ஜனவரி 4 ஆம் திகதி தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட விஷேட படையணியின் உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவும் ஒரு நன்கொடை திட்டத்தை விஷேட படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, 59 பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள், குடிநீர் போத்தல்கள், உணவுப் பெட்டிகள், புத்தகங்கள், எழுதுபொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் சுகாதார துவாய்கள் உள்ளிட்ட ரூ. 650,000 பெறுமதியான அத்தியாவசியப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், எதிர்கால அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக அவசரகால உபகரணங்களை வண. முகுனுவேல அனுருத்த தேரர் நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்வில் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா வெலேனவெவ, விஷேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே. வீரசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ, விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.