Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

31st December 2025 16:13:27 Hours

இராணுவ சேவை வனிதையரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

இராணுவ சேவை வனிதையர் பிரிவு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி நாகஹமுல்ல இராணுவ முகாமில் உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்தியது. இதன் மூலம் அண்மையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 3,656 இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து உலர் உணவு பொதிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.