Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

31st December 2025 15:03:34 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் கெமிலா பாடசாலையின் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இசை நிகழ்ச்சி

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 டிசம்பர் 11, அன்று மத்தேகொட கெமிலா பாடசாலையின் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இசை நிகழ்வு மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி.இரோஷினி பெர்னாண்டோ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

விசேட தேவையுடைய மாணவர்களின் நடன நிகழ்ச்சியுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினர் பாடசாலைக்கு உலர் உணவுகள், துப்புரவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் வழங்கினர்.