31st December 2025 14:07:56 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2025 டிசம்பர் 29 அன்று பனாகொடை படையணி தலைமையகத்தில் படையினரின் கர்ப்பிணி துணைவியருக்கு அத்தியாவசிய குழந்தை பராமரிப்பு பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.