31st December 2025 14:05:09 Hours
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு நிவாரண பொதிகளிலும் ஆடைகள், மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், குழந்தை பராமரிப்புப் பொருட்கள் மற்றும் வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் இருந்தன. இலங்கை இராணுவ பொலிஸ் படையணி நாடு முழுவதும் பொருத்தமான நேரத்தில் அவசியமான விநியோகத்தை முன்னெடுத்தனர்.
மேலும் 2025 டிசம்பர் 02, அன்று, பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே விநியோகிப்பதற்காக, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினர் இராணுவ சேவை வனிதையர் பிரிவுக்கு 1,700 குடிநீர் போத்தல்களை நன்கொடையாக வழங்கியது.
2025 டிசம்பர் 09, அன்று, உலர் உணவுப் பொதிகள், அத்தியவசிய தேவைகள், தண்ணீர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் நாடு முழுவதும் இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிப்பதற்காக சேவை வனிதா பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.