30th December 2025 21:54:04 Hours
மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலை பிள்ளைகளின் வருடாந்த கலை நிகழ்ச்சி 2025 டிசம்பர் 27 அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலை பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவியரும் மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலை சிரேஷ்ட உறுப்பினருமான திருமதி லிலந்தி தொலகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருகையின் போது சிறப்பு விருந்தினர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் வைபவ ரீதியாக அழைத்துச் செல்லப்பட்டதுடன் மேலும் பாலர் பாடசாலை பிள்ளைகள் தாம்பூலம் வழங்கி அன்புடன் வரவேற்றனர். பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியதுடன் அதைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு, பாலர் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலை பிள்ளை ஒருவரினால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் சிறப்பம்சமாக, பிள்ளைகள் வழங்கிய தொடர்ச்சியான கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் அழகான நடன நிகழ்ச்சிகள், கண்கவர் சிங்கள மற்றும் ஆங்கில நாடகங்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் பார்வையாளர்களை மகிழ்வித்தன, மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரின் அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தன. ஒரு பிள்ளையின் நன்றியுரை, அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.