Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th December 2025 15:20:43 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு ஆடைகள்

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 டிசம்பர் 24 அன்று கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 100 கர்ப்பிணித் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு ஆடைகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆடைகளை செல்வி ரவிஷா சோனாலி அபேவர்தன தாராளமாக வழங்கினார் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. தர்ஷனி யஹம்பத் அவர்களுடன் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.