Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th December 2025 15:23:30 Hours

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையரின் ஏற்பாட்டில் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

சிகிச்சையில் உள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டு வருவதற்காக, இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் 2025 டிசம்பர் 25, அன்று மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பிள்ளைகளுடன் இணைந்து நத்தார் பாடல்களை பாடினர். அதைத் தொடர்ந்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிற்றுண்டிப் பொதிகள், பரிசுப் பொதிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன, சுமார் 200 பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.