27th December 2025 21:49:43 Hours
சமீபத்திய தித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் திட்டம், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 டிசம்பர் 23 அன்று ஹெரலியாவத்த வசதி வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, கர்ப்பிணி மனைவிகளைக் கொண்ட ஏழு படைவீரர்களுக்கு தலா ரூ. 17,000.00 மதிப்புள்ள பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.மேலும், படையணி தலைமையகத்தில் பணியாற்றும் 28 சிவில் ஊழியர்களுக்கு தலா ரூ. 9,000.00 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, லுகேமியாவால் சிகிச்சை பெற்று வரும் லெப்டினன் கேணல் புத்திக சாந்தலால் அவர்களின் மகனுக்காக சுமார் ரூ.14,000.00 மதிப்புள்ள நெபுலைசர் இயந்திரம் வழங்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் உழியர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.