27th December 2025 21:45:49 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினர் போர் கருவி படையணி பாடசாலையுடன் இணைந்து 2025 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய திகதிளில் இரவு நேர பிரித் பாராயணம் மற்றும் அன்னதான நிகழ்ச்சியை போர் கருவி படையணி பாடசாலையில் நடத்தியது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி, சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆசிர்வாதம் வேண்டி இந்த மத அனுஷ்டானம் நடத்தப்பட்டது.
உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசி ஏஏடீஓ, இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஷிராணி நிர்மலின் விஜேகோன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.