27th December 2025 21:43:17 Hours
தியத்தலாவை 'விரு கெகுலு' பாலர் பாடசாலை பிள்ளைகள், தியத்தலாவை, டோர்ச் சினிமா அரங்கில் 2025 டிசம்பர் 24 அன்று நடைபெற்ற ஆண்டு இறுதி திறமை கண்காட்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி. தமயந்தி பன்டாரநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடனங்கள், பாடல்கள் மற்றும் திறன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அவை பிள்ளைகளின் வளரும் திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வண்ணமயமான கலை நிகழ்வை கண்டுகளித்தனர்.