Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

27th December 2025 21:47:39 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டதலின் கீழ் நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2025 டிசம்பர் 24 அன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி, சிவில் நன்கொடையாளர்கள் மற்றும் படையணி சேவை வனிதையர் பிரிவின் பங்களிப்புடன் கினிகத்தேன, நாவலப்பிட்டி மற்றும் தொலஸ்பாகை பகுதிகளில் இடம்பெயர்ந்த 575 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 மதிப்புள்ள உலர் உணவு பொதிகள், அத்தியாவசிய பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என மொத்தம் ரூ.3 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.