Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

24th December 2025 16:55:58 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் மருத்துவ முகாம்

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினர் இராணுவ சேவைப் படையணி பயிற்சி பாடசாலை, சுதந்திர போக்குவரத்துப் படை மற்றும் சுதந்திர விநியோகப் சபை ஆகியவற்றுடன் இணைந்து, பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவ முகாமை 2025 டிசம்பர் 13, அன்று இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் நடத்தியது.

50 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு சொற்பொழிவு நடாத்தப்பட்டன. பிலியந்தலை மற்றும் ஹோமாகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மருத்துவ சேவைகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வை நடத்தினர்.