24th December 2025 16:54:09 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவு, சுதந்திர விநியோக சபை, சுதந்திர போக்குவரத்துப் படை மற்றும் இராணுவ சேவை படையணி பாடசாலை ஆகியவற்றுடன் இணைந்து, 2025 டிசம்பர் 13 ஆம் திகதி இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில், அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இருபது பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் ஒரு திட்டத்தை நடாத்தியது.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா, நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.டி.பீ.டி. சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.