Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

24th December 2025 16:50:15 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் பொத்துவிளவில் வெள்ள நிவாரணத் திட்டம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் 2025 டிசம்பர் 19 ஆம் திகதி பொத்துவிள பிரதேசத்தில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை நடாத்தியது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, அப்பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்கள் அளித்த பங்களிப்பு, நிதி உதவி மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. விநியோகிக்கப்பட்ட பொருட்களில் ரூ. 700,000.00 அதிக பெறுதியான துணிகள், குடிநீர் போத்தல்கள் மற்றும் எழுதுபொருட்கள் ஆகியவை அடங்கும்.

இந்த நிகழ்ச்சி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.