Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd December 2025 09:18:40 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் உடுதும்பர கங்கொட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 டிசம்பர் 10, அன்று கண்டி, உடுதும்பர கங்கொட பிரிதேசத்தில் வசிக்கும் 113 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், உடைகள் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுத்தது.

கெரகல–புதுப்பகல வணிக சமூகத்தால் ஆடைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் நிதி உதவியுடன் திமிங்கில நீர்வாழ் நீச்சல் சங்கத்தால் உலர் உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த முயற்சி இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. தர்ஷனி யஹம்பத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.