Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd December 2025 09:16:41 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் தர்ம பிரசங்கம்

போதைப்பொருள், ஒன்லைன் சூதாட்டம் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான குடும்ப பிரச்சினைகள் மற்றும் சமூக நல்வாழ்வில் அவற்றின் தாக்கம் தொடர்பான கவனம் செலுத்தும் வகையில், வணக்கத்திற்குரிய ககம சிறிநந்த தேரர் அவர்கள் 2025 நவம்பர் 25, அன்று ஸ்ரீ போதிராஜராம விகாரையில் ஒரு தர்ம பிரசங்கத்தை நடத்தினார்.

இந்த முயற்சி இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. தர்ஷனி யஹம்பத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.