Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

22nd December 2025 14:47:20 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினர் இரத்தினபுரி குழந்தை இயேசு இல்லத்தின் பிள்ளைகளுக்காக நத்தார் பண்டிகை தின நிகழ்ச்சியை 2025 டிசம்பர் 14, அன்று நடத்தியது.

நிகழ்வின் போது, வண. அருட்தந்தை ஹெரால்ட் தாமெல் ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் அர்த்தமுள்ள உரையை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து பிள்ளைகள் பாடிய நத்தார் கீதங்கள் மற்றும் வண்ணமயமான நடனங்களும் இடம்பெற்றன.

நிகழ்வின் நிறைவை வண்ணம் சேர்க்கும் வகையில், கெமுனு ஹேவா படையணி இசைக்குழு பிரபலமான நத்தார் கீதங்களை இசைத்தது. மேலும், 67 பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பாடசாலை குடிநீர் போத்தல்கள் விநியோகிக்கப்பட்டன.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.