Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

22nd December 2025 14:48:31 Hours

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையரால் இரத்த தானம்

“தித்வா” பேரழிவால் இடம்பெயர்ந்தவர்களின் நலனுக்காக இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2025 டிசம்பர் 16, அன்று இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் இரத்த தான வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

ராகம போதனா வைத்தியசாலை பிரதேச இரத்த மையத்தின் மருத்துவ ஊழியர்களால் இந்த திட்டம் நடத்தப்பட்டது. இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் உட்பட சுமார் 110 நன்கொடையாளர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.