21st December 2025 15:30:40 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் உறுப்பினர்கள் 2025 டிசம்பர் 12 அன்று அத்திடிய மிஹிந்து செத் மெதுரவுக்கு விஜயம் செய்து நீண்டகால மருத்துவ சிகிச்சையில் உள்ள உள்நாட்டு போர் வீரர்களின் நலன் குறித்து விசாரித்தனர். இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. ஊனமுற்ற வீரர்களுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் மேலும் மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள்,செபியோ அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.