Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th December 2025 14:32:39 Hours

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரினால் நலன்புரி திட்டங்கள்

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவினரால் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நிமித்தம் நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 2025 டிசம்பர் 02 அன்று, அம்பத்தலே கிராமத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் வகையில், திரு. கீர்த்தி பண்டார தலைமையிலான குழுவால் நன்கொடையாக வழங்கப்பட்ட முழுமையான செயல்பாட்டு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, மகாவெல சமூக மையத்தில் நிறுவப்பட்டது. அதே நாளில், ரிதிகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு அதிகாரவனையற்ற அதிகாரியின் பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி தேவைகளுக்காக அத்தியாவசிய பாடசாலை உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் திருமதி காயத்ரி வடுகே அவர்களின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.

அதன் வருடாந்த நிகழ்வை தொடர்ந்து, 2025 டிசம்பர் 06, அன்று, இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவினரால் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதில் 1வது புலனாய்வு படையணியின் 23 பிள்ளைகளும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த 11 பிள்ளைகளும் இலங்கை கவச வாகன படையணி படையினரின் பிள்ளைகளும் பயனடைந்தனர். 1 வது இலங்கை கவச வாகன படையணின் சிவில் ஊழியர்களுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.