Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th December 2025 14:30:26 Hours

இராணுவ தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையரால் புலமைப்பரிசில்கள்

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்றலுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 18 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த, ஊனமுற்ற, ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரினி திசாநாயக்க அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் 2024 ஆம் ஆண்டுக்கான கபொத சாதாரண தர பரீட்சையில் 9 ‘A’ பெற்ற 193 மாணவர்களுக்கு தலா ரூ.25,000.00 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பிற்கான புலமைப்பரிசில்கள் பரீட்சையில் 170 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 53 மாணவர்களுக்கு தலா ரூ. 15,000.00 வீதம் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.

கலாசார நடன நிகழ்ச்சிகளால் விழா சிறப்பூட்டப்பட்டதுடன், தேநீர் விருந்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.