18th December 2025 14:52:52 Hours
பதுளை மற்றும் கண்டி பகுதிகளில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2025 டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரனி அவர்களின் வழிக்காட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
நிவாரண உதவியில் உலர் உணவு பொதிகள், குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான சுகாதாரப் பொருட்கள், ஆடைகள், தலையணைகள் மற்றும் மெத்தைகள் ஆகியவை அடங்கும். இந்த அத்தியாவசியப் பொருட்கள் மோதரை மற்றும் மட்டக்குளிய லயன்ஸ் கிளப்பினரால் இராணுவ சேவை வனிதையர் பிரிவிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
கம்பளை, குருதுவத்த, கிராவுல்ல, அம்பலன்பிட்டிய மற்றும் பஹல கம்பய ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவியை உறுதி செய்யும் வகையில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 111 வது காலாட் பிரிகேட் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.