11th December 2025 22:09:22 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சிரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 6 அதிகாரிகள் மற்றும் 236 சிப்பாய்களுக்கு உதவுவதற்காக அவசர நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்கள் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குச் சென்று உலர் உணவு பொதிகளை விநியோகித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை தெரிவித்தார்.
தற்போதைய நிவாரண திட்டங்களின் ஒரு பகுதியாக, 2025 டிசம்பர் 08, அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்ட உலர் உணவு பொதிகள், பிரிவின் தலைவி மற்றும் படைத் தளபதி ஆகியோரால் அடையாளமாக அந்தந்த கட்டளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.