10th December 2025 17:24:56 Hours
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 நவம்பர் 22 அன்று இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி தலைமையகத்தில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
2024 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் 2025 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் முப்பது மாணவர்கள் உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும் பரிசு வவுச்சரும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
உதவித்தொகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பயிற்றுவிப்பு அதிகாரி லெப்டினன் கேணல் கெலும் டி அல்விஸ் ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஒரு ஊக்கமளிக்கும் சொற்பொழிவை நிகழ்த்தினார்.
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.