Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th December 2025 17:32:11 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரால் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நலன்புரி உதவி

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தனிப்பட்ட மற்றும் குடும்ப சவால்களை எதிர்கொள்ளும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

இலங்கை சமிக்ஞை படையணியின் சிவில் ஊழியரின் வீட்டிற்கு மின்சாரம் இணைப்பை பெறுவதற்கும் குடும்பத்திற்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான மின்சார வசதியை உறுதிப்படுத்தவும் ரூபா 100,000.00 வழங்கப்பட்டது. அத்துடன், புற்றுநோயால் போராடும் தாயையும், உடல் செயலிழந்து படுக்கையிலுள்ள தந்தையையும் பராமரித்து வரும் சிப்பாய்க்கு உதவியாக ரூபா 50,000.00 வழங்கப்பட்டது.

மேலும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் தனது 4 வயது குழந்தையின் தொடர்ச்சியான மருத்துவ செலவுகளுக்கு உதவுவதற்காக அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு ரூபா 25,000.00 வழங்கப்பட்டது. ஒரு சிவில் ஊழியருக்கு ஒரு செவிப்புலன் கருவியை வாங்கவும், தினசரி செயல்பாடு மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும் 153,000.00 நிதி வழங்கப்பட்டது.

மேலும் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட ஒரு சிவில் ஊழியரின் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும், உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் குழு ஒன்று மாணவரின் கல்விச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கியது.