Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th December 2025 17:41:22 Hours

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையரால் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

தித்வா சூறாவளி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினர் பல நிவாரண திட்டங்கள் மேற்கொண்டுள்ளப்பட்டன.

2025 நவம்பர் 29, அன்று ஹங்வெல்லவில் ஒரு பெரிய அளவிலான உலர் உணவு விநியோகத் திட்டம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, அவர்களுடன் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்கள் இணைந்து கொண்டு 500 உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தார்.

அதன் ஆதரவு முயற்சிகளைத் தொடர்ந்து, பிரிவினரால் 2025 டிசம்பர் 07, அன்று கடுவெல, பஹல பூமிரிய மற்றும் கனேவத்த ஆகிய இடங்களில் மற்றொரு நிவாரணத் திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், ஆடைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் துப்புரவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

டிசம்பர் 06 அன்று, ரோட்டரி கிளப் மற்றும் பெஷன் ஸ்டோர் ஆகியவை சுகாதாரப் பொருட்கள், ஆடைகள் மற்றும் தூய்மைப்படுத்தும் கருவிகளை நன்கொடையாக வழங்கின.