Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th December 2025 17:48:48 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் “தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை இராணுவ போர் கருவி படையணி குடும்பங்களுக்கு நிவாரணம்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினர் 4 வது (தொ) இலங்கை இராணுவ போர் கருவி படையணியுடன் இணைந்து, கண்டியில் உள்ள இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் குடும்பங்களை ஆதரிப்பதற்காக 2025 டிசம்பர் 07 அன்று, உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ எஎடிஓ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிராணி நிர்மலின் விஜேகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு நிவாரண உதவித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பகுதியளவு மற்றும் முழுமையாக சேதமடைந்த 21 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து விநியோகத்தில் முழுமையாக பங்கேற்றனர்.