Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th December 2025 17:51:21 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரின் வருடாந்த புத்தக நன்கொடை நிகழ்வு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 டிசம்பர் 05, படையணி தலைமையகத்தில் அதன் வருடாந்த புத்தக நன்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணியாற்றும் இராணுவத்தினரின் 3,395 க்கும் மேற்பட்ட பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ரூ.4,000,000.00 பெறுமதியான புத்தகப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும் 32 பிள்ளைகளுக்கு ரூ.2,000.00 பண பரிசுடன் புத்தகப் பொதிகள் அடையாளமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது, 2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்து விளங்கிய 62 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.