10th December 2025 17:53:43 Hours
நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன தலைமையில்,கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, தலையணைகள், படுக்கை விரிப்புகள், துவாய் மற்றும் மடிப்பு மெத்தைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்கவிடம் வழங்கினார்.