09th December 2025 16:17:39 Hours
காலி 'விரு கெகுலு' பாலர் பாடசாலை பிள்ளைகளின் வருடாந்த கலைவிழா 2025 நவம்பர் 25 அன்று காலி ஹோல் டி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில், பிள்ளைகள் நடனங்கள், இசை அம்சங்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்ட திறமைகளை வெளிகாட்டி பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியை வழங்கினர். நிகழ்வின் முடிவில், பிரதம விருந்தினர் பாராட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எஸ் வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்களுடன் காலி 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் பொறுப்பாளர் திருமதி புத்திகா பெர்னாண்டோ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாலர் பாடசாலையின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கவர்ச்சிகரமான மற்றும் வண்ணமயமான நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டதுடன் பாராட்டுகளை தெரிவித்தனர்.