09th December 2025 16:15:31 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நடத்தப்பட்ட நிதி உதவி நிகழ்ச்சித்திட்டம் 2025 நவம்பர் 25 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, இரண்டு வீரர்களுக்கு தலா ரூ. 100,000.00 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒரு வீரரின் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பால் மா வாங்குவதற்காக வழங்கப்படும் ரூ. 96,000.00 நிதியுதவியில் முதல் தவணைக்காக ரூ. 8,000.00 வழங்கப்பட்டிருந்ததுடன் அடுத்த தவணைகளுக்காக ரூ. 40,000.00 வழங்கப்பட்டது.
மேலும், முந்தைய வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் முன்னர் உதவி வழங்கப்பட்டு பகுதியளவு கட்டப்பட்டிருந்த வீடுகளை நிறைவு செய்வதற்கு உதவி வழங்கப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்த இரண்டு ஊனமுற்ற போர்வீரர்களுக்கு ரூ. 200,000.00 மற்றும் ரூ. 150,000.00 நிதி உதவியும் வழங்கப்பட்டது. மேலும் ஒரு சிப்பாய் மற்றும் ஒரு சிவில் ஊழியருக்குச் சொந்தமான வீடுகளை நிறைவு செய்வதற்காக ரூ. 150,000.00 மற்றும் ரூ. 100,000.00 நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் இராணுவ வீரர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி ரூ. 848,000.00 ஆகும்.