08th December 2025 07:33:33 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றொரு நன்கொடைத் திட்டத்துடன் தனது நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சி 2025 டிசம்பர் 6 ஆம் திகதி ஜா-எல, துடெல்லவில் உள்ள கிறிஸ்ட் கிங் கல்லூரியில் நடைபெற்றது. ரூ. 10,000.00 க்கும் அதிகமான பெறுமதியான ஒவ்வொரு நிவாரணப் பொதியிலும் உலர் உணவுப் பொருட்கள், சுகாதார பொருட்கள், போர்வைகள் மற்றும் சமையலறை வீட்டுப் பொருட்கள் இருந்தன. ரூபா ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியில் 100 குடும்பங்களுக்கு இந்தப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த திட்டத்திறகு சிங்கப்பூர் மகாகருணா பௌத்த சங்கம், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் பல நன்கொடையாளர்கள் ஆதரவு வழங்கினர்.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சிரேஷ்ட உறுப்பினர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.