04th December 2025 17:14:22 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சியின் மூலம், சூறாவளி ஏற்பட்டதிலிருந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிய உணவு மற்றும் இரவு உணவு பொதிகளை வழங்கியது.
இந்த அபாயகரமான சூழ்நிலையின் போது, வெல்லம்பிட்டிய, கொலன்னாவை, கொடிகாவத்தை, அங்கொட, பொரளை, கடுவெல மற்றும் போமிரிய ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இராணுவ சேவை வனிதையர் பிரிவு நிவாரணங்களை வழங்கியது.
கருணை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவிக் கரங்கள் இந்த நிவாரண முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்ள சேவை வனிதையர் பிரிவிற்கு உதவியது.