04th December 2025 17:15:39 Hours
சிலாபம் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், ஆடைகள், குடிநீர், உணவுப் பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை விநியோகிக்கும் நன்கொடைத் திட்டம், 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் ஆரம்பிக்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான முயற்சி, நன்கொடையாளர்களின் ஆதரவுடன், ரூ.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஆடைகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுடன், 1,000 உலர் உணவுப் பொதிகள் மற்றும் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, கேணல் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.