02nd December 2025 12:20:53 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு, இலங்கை சிங்க படையணி உறுப்பினர்களின் 24 கர்ப்பிணி துணைவியர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கும் திட்டத்தை 2025 நவம்பர் 21 அன்று இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியின் போது, கர்ப்பம் தொடர்பான முக்கிய சுகாதார தகவல் விரிவுரையை மீரிகம சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த வைத்தியர் நதீகா ஜயவர்தன, பொது சுகாதார பரிசோதகர் சத்துரங்க பிரியநந்தன அவர்களுடன் இணைந்து நடத்தினார்.