27th November 2025 14:03:56 Hours
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் 2025 நவம்பர் 19 அன்று நடைபெற்ற ஆண்டு இறுதி திறமை கண்காட்சியில் பனாகொட “விரு கெகுலு” பாலர் பாடசாலையின் சிறார்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் சிறார்களின் வளரும் திறன்கள் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ச்சியான நடனங்கள், பாடல்கள் மற்றும் திறமைகள் விளக்கக்காட்சிகளாக இடம்பெற்றன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாலர் பாடசாலையின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வண்ணமயமான கலைவிழாவினை கண்டு களித்தனார்.